யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Morden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரநிரூபசிங்கம் தர்மகுலராஜசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இறையடி சேர்ந்து 31 நாட்கள்
நீங்கியும்
நித்தம் நினைவில்
நிற்கும்எங்கள் குடும்ப விளக்கு!!
எம்மோடு இருந்து எம்மையெல்லாம்
இயக்கி எமக்கு வழிகாட்டி...
பாசமிகு தந்தையாய் பண்புள்ள
அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நாளும் பொழுதும்
உன் நினைவால்
சொந்தம்
அழுது உருகுதப்பா...
ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும்
உங்களின்
எண்ணங்களும்
செயல்களும் எங்களுடனே
பயணிக்கும் அப்பா
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது
நாட்கள்
பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூ றியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Deepest condolences 🙏