Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 21 JAN 1943
மறைவு 07 DEC 2022
அமரர் பரம்சோதி சச்சிதானந்தம்
Proprietor of “Paransothy Stores”, N.M. P Transport, All Island Agent for Maharajah and Union Carbide of Sri Lanka
வயது 79
அமரர் பரம்சோதி சச்சிதானந்தம் 1943 - 2022 வியாபாரிமூலை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்தபரம்சோதி சச்சிதானந்தம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 14-12-2024

அன்பை விதைத்த அப்பாவே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்?
 பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஈராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!

கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
அப்பா இனி காண்பது எப்போது?

ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்றழைக்க
நீங்கள் எனதருகில் இல்லையே!

இன்றும் என்னை நிழல் போலத்
தொடர்ந்து வரும் அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
கண்ணீரை காணிக்கையாக்குகின்றேன் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 11 Dec, 2022
நன்றி நவிலல் Fri, 06 Jan, 2023