யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சுப்ரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மரணம் என்பது இயற்கை தான்.
அதை ஏற்பது மனித இயல்பு தான்.
ஏனோ. இதயம், வலிக்கிறது அது
ஏனென்று. இதுவரை புரியவில்லை.
நீ எங்களை கைகளில் தாலாட்டிய போதெல்லாம்
உன் அன்பின் கடல் எங்களைச் சூழ்ந்தது.
உன் மடி சிறியதானாலும்,
அதில் எங்களுக்கு உலகமே இருந்தது.
இன்று நீ இல்லாத இந்த உலகத்தில்,
விழிநீர் எங்கள் கண்களில் தங்கியிருக்கிறது.
உன் கைப்பிடி இல்லாத அழுகைகள்
எங்கள் இதயத்தைப் பிளந்திடுகிறது.
அம்மா, நீ எங்களை மகிழச்சி,
நம்பிக்கை, காதல் என நிறைத்தாய்.
உன் அரவணைப்பு அற்ற காலம்,
பரிதாபத்தின் பயணம் ஆகிவிட்டது.
அம்மா, உன்னோடு பேச முடியாத
வெறுமையான இந்நாளில்,
உன்னால் நம் இதயங்களில் ஒளிந்து கொண்ட
அன்பு என்றும் அழியாது.
உன் வார்த்தைகள், உன் அழகிய சிரிப்புகள்,
எங்களின் நினைவுகளின் வெளிச்சமாகும்.
நீ எங்கிருந்தாலும் உன் ஆசி எங்களை தாங்கும்.
உன்னை வாழ்நாள் முழுவதும் எண்ணி,
உன் பிள்ளைகள் குடும்பத்தினர்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
I miss you so much Amma. I love you always 🕊️🤍