யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவராமலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அம்மம்மா நினைவுகளை நெஞ்சமதில் இருத்தி -அவர்
அன்புதனை நினைந்து, ஆன்ம சாந்தி வேண்டுகின்றோம்.
கவிதை மலர் தன்னைக் காணிக்கையாக்கித்
தொழுது நிற்கின்றோம்.நினைவில் ஏந்துகின்றோம்.
நிறைவுடன் வாழ்ந்தது போதும் என்றெண்ணி
முருகன் தாளினைச் சென்றடைந்தார் அம்மம்மா
பாணப்பா பெற்ற மகள் பரமேஸ்வரி என்று, காண்போர்
காணும் இடமெங்கும் கூறும் பேறு பெற்று -அருட்பா
பாடும் திறமை கொண்டு சீரோடு வாழ்ந்த பெண்ணாள்.
மயில் ஆடும் முருகன் திருவடிகள் சேர்ந்து விட்டார்
சிவனொடு சக்தியாய்.ஆதியும் அந்தமுமாய் -தாத்தாவுடன்
மனமொத்த இணையராய் இல் வாழ்வில் இணைந்து
ரகுவொடு மணியும் வாசுகியும் வளமென
மகிழ்வொடு வாழ்ந்த மங்கையர்க்கரசியாள்..
மருமக்கள், பேரர்கள் பெருகிய சுற்றமென
உறவினர் ஊரவர் உள்ளன்பு கொண்டவர்
பழகிய நண்பர்கள் நாடிய நட்பு என
அழகிய வாழ்வினை வாழ்ந்த அம்மையார்.
திருமுறை ஓதும் பாங்கினை நினைந்து -நாங்கள்
திருமுறை பாடிப் பணிகின்றோம் அம்மம்மா.
தாத்தாவுடன் வானுலகில் வாழ்க!
தாத்தாவுடன் வானுலகில் வாழ்க!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தன் ஆருயிர்த்துணைவரை 06-09-2021ல் இழந்து சோகத்தைத் தழுவிய எம் மூதாட்டி திருமதி பரமேஸ்வரி சிவராமலிங்கம் அவர்களின் உள்ளக்குமுறலை நிவர்த்திசெய்யப்போலும், எம் படைப்பாளி அவரையும் தம் கணவர்...