Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 03 DEC 1942
ஆண்டவன் அடியில் 14 JAN 2023
அமரர் பரமேஸ்வரி சிவராமலிங்கம் 1942 - 2023 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 02-02-2024

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி சிவராமலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா!
ஆண்டொன்று ஆனதம்மா
இன்முகம் எங்கேயம்மா
ஈன்றவளே எம் தாயம்மா
உயிர்போடு காத்தாயம்மா
ஊர் பற்றுடன் வளர்ந்தாயம்மா
எட்டுத் திக்கும் பறந்தாயம்மா
ஏட்டுப் பதிகங்கள் படித்தாயம்மா
ஐயம் தவிர்த்தாயம்மா
ஒற்றுமையே உயர்வு என்றாயம்மா
ஓம் என ஓலித்தாயம்மா
ஔவியம் காத்தாயாம்மா
அஃது அழியாது உன் நினைவம்மா!!

எங்களை தவிக்கவிட்டு
இமைகளை மூடி விட்டீர்கள்
எம்மையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டீர்கள்

எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உன் நினைவு மாறாது
உன் உறவுகள் மறக்காது

உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!

தகவல்: குடும்பத்தினர்

Photos