யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Guelph ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி மயில்வாகனம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
அன்பின் உறைவிடமாய்
இல்லறத்தில் உயர்ந்து நின்றாய்
பெண் இனத்தின் பெருந்தகையாய்
நல்லறமாய் வாழ்ந்து சென்றாய்!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
சிரித்த முகம் மாறாத
சிறுபிள்ளை போன்ற உள்ளம்
உற்றார் உறவினரை - வரவேற்று
உபசரிக்கும் உயர்ந்த குணம்
வாடி நிற்கும் மனிதருக்கும்
சேவை பல செய்தாயம்மா!
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு - என்றும்
எம் அருகில் இருக்கின்றாய் - அதனால்
ஏங்கவில்லை நாம் இனிக் காண்போமா என்று
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Sinthuja & Sivarupan Great Grandchildren - Abi, Saiyen & Saran from UK.
Heartfelt condolences to Chithra, Siva and your families. Let her soul Rest In Peace. Kala Vamadevan Australia