3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி கந்தசாமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்றாண்டுகள் என்ன? மூவாயிரம்
ஆண்டுகள் சென்றாலும் ஆறாது எம்
துயரம் தாயே! ஓடோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டீரோ?
எதிர்பார்க்கவில்லை உங்கள் பிரிவை
வாழ்கின்றோம் உங்கள் அரவணைப்பில்
தவிக்கின்றோம் உங்கள் பிரிவால்
வாழ்கின்றோம் உங்கள் நிழலாய்
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டோம் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் எங்களை விட்டு
எங்கள் கனவை உடைத்துவிட்டாய்
அம்மா... அம்மா... அம்மா...
என்ற சொல்லுக்கே ராணியம்மா நீ
கண்ணீரில் கரைகின்றோம் காலங்கள் கடந்தாலும்
கரையாது உன் நினைவுகள் அன்புத் தாயே!
உங்கள் ஆத்ம சாந்திக்கு
வேண்டி என்றும் பிரார்த்திக்கும் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்
எங்களருமை அம்மம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். அன்புப் பேத்தி அபிராமி.