2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி கந்தசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் மறைந்து இரண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன்நிறுத்தி என்றும்
உங்கள் மீளா நினைவுகளுடனே வாழுகின்றோம்.
உதரத்துள் உயிர்தந்து
உதிரத்தைப் பகிர்ந்தளித்தீர்
உதட்டோரப் புன்னகையால்
இன்முகம் மலர்ந்திடுவீர்
அன்பான மொழிபேசி
உறவுகளை அரவணைத்தீர்
அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தமாய் வாழ்ந்திட்டீர்
எழுத முடியவில்லை, இதயம் கனக்கின்றது
எம்மை விட்டு நீ நீங்கியதாய் நாம் நினைப்பதில்லை
அம்மா நீ எம்மோடு இருப்பதாய்
கற்பனையில் கழிக்கின்றோம் தாயே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
எங்களருமை அம்மம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். அன்புப் பேத்தி அபிராமி.