Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 OCT 1926
இறப்பு 27 AUG 2021
அமரர் பரமேஸ்வரி சோமசுந்தரம்
வயது 94
அமரர் பரமேஸ்வரி சோமசுந்தரம் 1926 - 2021 காரைநகர் மருதடி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்புடனும் பாசத்துடனும்பாது
காத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ

மென்மையான உள்ளம் கொண்டு
உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே

நான்கு ஆண்டுகள் ஆனதம்மா - ஆனால்
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உன்னைப்போல் யாரும் இல்லை அன்னையே

நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
உன்னதமான அன்னையே - உங்கள்
உடல் மட்டும்தான் பிரிந்து போனது
உயிர் எம்முடன் தான் இருக்கிறது

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா.

உங்கள் ஆத்மா அமைதிபெற பிரார்த்திக்கின்றோம்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்