
யாழ். அச்சுவேலி சன்னதி வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு உப்புமடம் மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேந்திரம் ரயு குமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
சஷ்டி வளர்பிறை திதி: 29-08-2025
அன்பின் திருவுருவாய்
அகத்தின் ஒளிவிளக்கே !
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
மூன்று ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்கிறது!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அகலாது!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
MY DEEPEST CONDOLENCES FOR HIS FAMILY FROM KIRUBHAKARAN CANADA FROM ATCHUVELY.