யாழ். அச்சுவேலி சன்னதி வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு உப்புமடம் மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேந்திரம் ரயு குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சஷ்டி திதி: 22-08-2023
பிள்ளைகள்:
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் -அப்பா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா ?
நெஞ்சடைக்கும் நினைவுகளால்
நித்தமும் நாம் கலங்குகின்றோம்
ஒருமுறை வந்து எங்கள்
துயர்துடைக்க வேண்டாமா?
எங்களை தெய்வங்கள் கூட கை விட்டதோ!
என் மனதோடு போராடும்
உன் மறையாத ஞாபகங்கள்
எனை என்றும் வாட்டுதையோ !
ஆறா துயர் தந்து மீளாத்துயில் கொண்டாய்
வருவாய் என்று நான்
காத்திருந்த காலங்கள் இன்று
ஆண்டு ஒன்று ஆகியது
ஓராண்டு என்ன
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது என் துயரம்
எழுந்தோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டாயோ !
கனவுகள் நிறைவேறும் காலமதில்
காலன் அவன் அழைத்து விட்டான்
உங்கள் கனவை கலைத்து விட்டான்
யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று தெரியாது
கலங்கி நிற்கின்றோம்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
குடும்பத்தினர்,
உறவினர்கள், நண்பர்கள்.
மனைவி:
வருடம் ஒன்று கடந்ததுவோ
நம்பவே முடியவில்லையே
நேற்றுப்போல் இருக்குதைய்யா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்!
ஆணிவேராய் எம்மைக்
காத்து நின்ற எங்கள் தெய்வமே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
ஆண்டு ஒன்றாகியும் ஆறவில்லை எம்மனம்
விழிகளில் கண்ணீர் காயவில்லை!
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உங்கள் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் !
எம் வாழ்வில் நீங்கள் இல்லை
என்ற எண்ணம் எமக்கில்லை
வாழ்வீர் எம்மனதில்
நாம் வாழும் காலம்வரை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
பிரிவால் வாடும் மனைவி....
MY DEEPEST CONDOLENCES FOR HIS FAMILY FROM KIRUBHAKARAN CANADA FROM ATCHUVELY.