Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 JUN 1949
மறைவு 19 AUG 2019
அமரர் பரமசாமி பாலசுப்பிரமணியம்
வயது 70
அமரர் பரமசாமி பாலசுப்பிரமணியம் 1949 - 2019 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Burgdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமசாமி பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் திருவுருவே
எங்கள் உயிரே அப்பாவே
ஆண்டொன்றென்ன ஆயிரம் ஆண்டுகள் மறைந்தாலும்
எங்கள் அன்புத் தெய்வத்தின் அளவில்லாப் பாசம்
எம் இதயத்தில் அலையலையாய் நிலைத்து நிற்கும்

சூறாவளியொன்று சுழன்றடித்த வேளைதனில்
குத்துவிளக்கொன்று குடை சரிந்த போது
எங்கள் குலவிளக்கு அணைந்ததுவே
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட
எம் அப்பாவின் ஒளி இழந்து தவிக்கின்றோம்

ஆலமரம் ஒன்று அடியோடு சாய்ந்ததப்பா
குருவிக்கூடொன்று சிதைந்திங்கே போனதப்பா
சிட்டுக்குருவிகளும் இங்கே சிக்கித் தவிக்குதப்பா
தேடி அலைகின்றோம் உங்கள் திருமுகத்தைக் காணவில்லை
கூப்பிட்டழைக்கின்றோம் உங்கள் குரலோசை கேட்கவில்லை சோடிழந்த கன்றினைப் போல் நாமிருந்து புலம்புகிறோம்
எமக்கருகில் வந்திருந்து எமக்கு ஆசி தந்திடப்பா

என்றும் நீங்கா  நினைவுகளுடன்
உங்கள் திரும்பாதக் கமலத்தில்
எங்கள் கண்ணீர்ப் பூக்களைக் காணிக்கையாக்கி
இறைவன் திருவடியில்
உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறையருளை வேண்டுகிறோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்