1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பரமசாமி கனகாம்பிகை
வயது 73
Tribute
27
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் இல. 341, 5ம் யுனிற்றை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Sinsheim ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமசாமி கனகாம்பிகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
எல்லோரையும் தவிக்கவிட்டு
ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்
அன்புடனும் பாசத்துடனும் எம்முடன்
கூடிக் குலாவி மகிழ்ந்திருந்து
தெய்வமாகி விட்டாயே!
உன் நினைவில் இன்றுவரை வாடுகின்றோம்.
எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மாசாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்