

யாழ். மிருசுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமானந்தம் விசாலாட்சி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அம்மம்மா, அப்பம்மா!!
பாசத்தால் அரவணைத்து,
பண்புடன் வாழ வேண்டும் என அறிவுரைகள் பல கூறி,
எமது வாழ்க்கையின் வழிகாட்டியாய் இருந்தீர்கள்.
அயல் நாட்டிலிருந்து உங்களை பார்க்க ஓடி வரும்போதெல்லாம், சுவையான உணவு தயார் செய்து எங்களை எதிர்பார்த்து இருப்பீர்கள்.
இனி, யாரை நோக்கி எங்கள் கால்கள் ஓடும் அம்மம்மா?
எங்களை கண்டவுடன் உங்கள் மூக்கு வளையத்தின் மினு மினுப்பையும்,
அத்துடன் மலரும் உங்கள் பொன் சிரிப்பையும் இனி காணோமோ?
காலத்தின் கடமைகளை கடைசிவரை கண்ணியத்துடன் செய்து விட்ட திருப்தியில் தானோ, காலனவன்
அழைத்த போதும் கலங்காது கடவுளின் பாதங்களை சென்றடைந்தீர்கள்.
ஆண்டுகள் பல முடிந்தாலும், உங்களின் பிரிவை எண்ணி வருந்துகின்றோம்
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பேரப்பிள்ளைகள்....