Clicky

பிறப்பு 21 JUN 1963
இறப்பு 13 JAN 2022
அமரர் பஞ்சலிங்கம் துஷியந்தன்
வயது 58
அமரர் பஞ்சலிங்கம் துஷியந்தன் 1963 - 2022 தாவடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ganesashalingam Kasippilai 19 JAN 2022 Switzerland

கண்ணீர் பூக்கள் அமரர்பஞ்சலிங்கம் துஷியந்தன் மண்ணில் :-21 -06-1963 விண்ணில் :- 13 -01-2022 அன்பும் பண்பும் நிறைந்தவனே அரவணைப்பும் ஆதரவும் தருபவனே இன்சொல்லும் ஈகையும் அளிப்பவனே உன் செய்திதானே இன்று உதவிடும் உள்ளம் நீ உறுதுணை தந்தவன் நீ முன்னின்று பல பணிகள் முழுமூச்சாய் செய்தவன் நீ உன்னை இழந்தது உண்மையோ இல்லையென்று சொல்லய்யா பழகியவர்கள் கலங்குகிறோம் இது கனவென்று சொல்லய்யா காலனவன் கடமைக்கு காலநேரம் இல்லையோ கலங்கி நாம் நிற்கவோ அவன் பொல்லாத கடமையோ ஒருமுறை வீசுவாயோ உன் புன்னகை வழியனுப்ப வந்து நிற்கிறோம் விடைபெறும் வேளையாவது முகம் பார்த்து செல்கின்றோம் சென்றிடு தோழா ஆண்டவனை வேண்டுகிறோம் உன் ஆத்மா அமைதி கொள்ள.... ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி உன் பிரிவால் துயருறும் காசிப்பிள்ளை கணேசநாதன் காசிப்பிள்ளை கணேசலிங்கம் யாழ். தாவடி. சுவிஸ்

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 17 Jan, 2022