5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:26/08/2025
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dueren ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சலிங்கம் தயாளன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
ஐந்து வருடங்களாகியும்
அனல் கக்கி எரியுதையா
எம் கணவனே, எங்கள் மச்சானே, எங்கள் சகோதரனே,
எங்கள் அப்பாவே , எங்கள் உறவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே நிறைந்திட்ட குல விளக்கே
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஐந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்
உங்கள் நல்ல முகம் மறைந்ததென்று
சொல்ல முடியவில்லை எம் சோகத்தை
மெல்ல முடியவில்லை உங்கள் நினைவுகளை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்