
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dueren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் தயாளன் அவர்கள் 21-08-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாக்கன் இரத்தினம் இராசமணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஆலங்குழாய் சவியர் சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கார்க்காரப் பஞ்சலிங்கம், இராசபூபாலநாயகி(வேவி) தம்பதிகளின் அன்பு மகனும், சுதுமலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்(பாட்டுக்கார மணியம்) சிவகுரு வள்ளிநாயகி தம்பதிகளின் மருமகனும்,
ராதா(நிர்மலா) அவர்களின் அன்புக் கணவரும்,
ரெபேக்கா(Dueren), காலஞ்சென்ற ராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீபாலன்(தாவடி), தர்சினி சாந்தகுமாரன்(Beverwijk), இராசபாலன்(CTB- தாவடி), தயாளினி பஞ்சசோதி(Venray) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ்வரன் சொர்ணலிங்கம்(Dueren) அவர்களின் சின்னப் பெரியப்பாவும்,
சுப்பிரமணியம் பரமலிங்கம், ராமச்சந்திரன் பத்மரேகா, யோகலிங்கம் பரமேஸ்வரி, சுப்பிரமணியம் பஞ்சாச்சரம், ஜெயகுமாரன் பாக்கியலட்சுமி(ஐக்கிய அமெரிக்கா), கோகுலராம் பத்மகலைவானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தகுமாரன் கந்தையா(Beverwijk), பஞ்சசோதி சிவக்கொழுந்து(Venray), விமாலினி இராசபாலன்(பிரதி அதிபர்- உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம், துன்னாலை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.