2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 30-08-2022
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dueren ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சலிங்கம் தயாளன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் ஞாபகத்தில் அப்பப்போ நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
குடும்பத்தின் மூத்தமகனாய்
ஒளிர்ந்தவனே!
இனியாரும் இல்லை உன்போல
நம் அன்புக் கட்டளைகளை ஏற்க!!
இப் புவியில் உன்னை இழந்த துயர்
நீக்க ஈடு ஏதுமில்லை!!
வருடங்கள் இரண்டுதான் போனது
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லை
உன் உடல் தான் உலகைவிட்டு
மறைந்தது உன்
நினைவுகள் எங்களை
விட்டு என்றுமே
மறைவதில்லை!
எங்கள் உடலில் உயிர் உள்ள வரை
உன் நினைவுகள் என்றும்
அழியாத பொக்கிஷம் கண்ணா!!!
உன் நினைவகளை என்றுமே
நெஞ்சில் சுமக்கும்
உற்ற உறவுகள் நண்பர்கள்!
தகவல்:
குடும்பத்தினர்