யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பத்மலீலா யோகலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்பு அளித்த யோர்க் மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், Chapel Ridge Funeral Home க்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வாழ்வும் சாவும் இயற்கையின் நியதி நீடு வாழ்ந்தா நிம்மதியாக என்றும் அவ நினைவாக நிம்மதியாக வாழ்வோம் நாங்கள்.