யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நித்தியானந்தன் இந்திராவதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவலைகள்
வருடங்கள் ஐந்து ஆகிவிட்டது அம்மா
எங்கள் வாழ்வின் வசந்தமும் சுகந்தமுமாய்
நீயாகத்தானே தாயே இருந்தாய். இன்று
துடுப்பற்ற ஓடமாய் மனதெல்லாம் பாரமாய்
உன் முத்துகள் மூன்றையும் அணல்மேல்
தவிக்கவிட்டு தூரத்து நட்ச்சத்திரமாய் மீளாத
ஒளியாகிப் போனாயே எம் வாழ்வின் இறைவியே.
அம்மா எத்தனை அர்த்தமான வாழ்வியலை
எமக்கு உணரவைத்தாய் எல்லையில்லா
கனிவும் தேவையான நேரத்துக் கண்டிப்பும்
அயராத உழைப்பும் பொங்கிப் பெருகும்
நீரூற்றாய் பேரன்பும் நன்நெறிகள் கொண்ட
நேர்மையும் நீந்தே போய்விடாத துணிவும் நீ
போதித்த அற்புதமான நற்போதனைகள
இன்று நாம் உணருகின்றோம் தாயே
எமக்காக தூர தேசம் சென்று
எம் நினைவுகளை மட்டுமே சுகமான
சுமைகளாய் சுமந்து எமக்காக உழைத்த தியாகத்
திருவுருவான எங்கள் அப்பாவின் ஏக்கம் எம்மை
பாதித்து விடாமலும் அப்பா அருகில் இல்லாத துயரையும்
தனக்குள் புதைத்து எமக்காக மட்டுமே
தன் வாழ்வின் வசந்தங்களை தொலைத்து வாழ்ந்த
உன் மகிமையை இன்று நாம் உணருகின்றோம் அம்மா
யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம்
உன் மகள்களாக இப் பூவுலகில் நாம் பிறந்து .
பிறந்த
நற்பயனை பெரும் பேராய் நாம் பெற்றுக் கொண்டோம் தாயே
இனி இருக்கின்ற ஜென்மம்
எல்லாம் நீயே எங்கள் தாயாகும் வரம் வேண்டும்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தமயந்தி, சந்திரபாலன், பாமதி, சுதர்சன், கிருஷாந்தி, ராஜ்குமார்