யாழ். கோண்டாவி்ல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நிருஜா சுதாகரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு நான்கு வந்ததுவோ அன்பு நிருஜா
ஆற்ற முடியவில்லை உன் பிரிவின் துயரம்
கண்களிலோ இன்னும் காயவில்லை ஈரமம்மா
பிஞ்சுக் குழந்தைகள் நாம் பித்தாய் துடிதுடிக்க
காலனின் சதியால் கலங்கி நிற்கின்றோம் தாயே
மண்னில் மதிப்பொடு மணியாய் மலர்ந்தீர்
மகிழ்வொடு எல்லோர் மனங்களில் நிறைந்தீர்
விண்ணோடு நீ சென்று கலந்து விட்டாலும்
கண்ணோடு நின்று நித்தம் காட்சி தருகின்றாய்
உன்னோடு வாழ்ந்த இனிய பொற்காலம்
இனி என்று வந்திடுமோ என ஏங்குகிறோம்
கனவான உன் ஆசைகள் நிறைவேறு முன்
நிழற்படமாய் உனைப் பார்த்திட வைத்தீரே
ஏற்றிய விளக்காய் எம் மனங்களில் நிறைவீர்
இறைவன் தாள்களில் அடைந்திடுவீர்
சாந்தி
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் உன் நினைவுகளுடன் அருமை கணவர்,
ஆருயிர் பிள்ளைகள், அன்பு அப்பா, மாமா, மாமி,
அருமை அண்ணன்மார், மைத்துனர்கள் மற்றும் மைத்துனிமார்கள்...
Our sincere condolences to you and your family