கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nirmalathevy Uthayakumar
1957 -
2022
விழிநீர் அஞ்சலி ********************** விடிதான பொழுதொன்றில் உயிருருகும் செய்திகேட்டோம்...!!! உடன் பிறவா அக்கா உனது பிரிவின் நிகழ்வு எம்மைக் கலங்க வைத்ததுவே....!!! நின்னோடு பழகிய காலங்கள் பின்னோக்கி பார்க்கின்றோம் பிரிவதனின் வலிதன்னை சுமக்க முடியாமல் நெஞ்சமது விம்முகையில் விழிமடலும் நனையுதக்கா....!!! வழிதெரியா தவிக்கும் உன் உறவுகளை ஆற்ற வார்த்தைகள் கூட தடம் மாறுதக்கா....!!! காலனுக்கேன் இத்தனை அவசரமோ உன்னைக் காண மனம் துடிக்கிறதே...!!! வழிதெரியாப் பயணமொன்று உனை வலிந்து அழைத்தனையோ ...!!! தேவி அக்கா என்று தேடியிங்கே எம் உளமது உருகுதக்கா என்ன சொல்லி ஆறுதல் கொள்ள உன் ஆத்மா இறையடி சேரட்டும். உங்கள் பிரிவால் துயரும், சந்திரன் குடும்பம், (சுவீஸ்)
Write Tribute