யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி உதயகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 17-12-2023
ஆண்டுகள் ஒன்று மின்னலென மறைந்தாலும்
எமை ஆளாக்கியவரது
பிரிவுத்துயர்
அணையாது என்றுமே.. எம் மனதில்
அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த
எங்கள் அன்பு அம்மா
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும்
எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது
அம்மா நீங்கள் எமை விட்டுப் பிரிந்தாலும்- தாயே
நித்தமும் உங்கள் நினைவு
நெஞ்சில் நிழலாடுதம்மா
எம் சொப்பணத்தில் நீங்கள் சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா
ஓராண்டு ஆனால் என்ன
ஓராயிரம் வருடங்கள்
ஓடினால் என்ன
என்றும் உங்கள் பிரிவால்
நாம் துடிக்கின்றோம் அம்மா.
"அம்மாவின் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! "