யாழ்ப்பாணம் சேர் பொன் ராமநாதன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நிரஞ்சன் சிங்கராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் கடக்கிறது ஆனால்
நாட்கள் போல் தெரிகின்றது உம் நினைவு,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உம் உறவுக்கு யாருமே நிகரில்லை.
உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை!
மறைந்திட்டாயோ என்று நினைத்திட
எங்கள் விழிகள் நித்தம்
கண்ணீரால் நனைகின்றது.
கட்டிடங்கள் காலத்தால் சிதைந்து போகும்!
காசு பணம் வாழ்நாளில் கரைந்தே போகும்!
நல்லவையும் சில நேரம் வாழ்வில் தாழ்ந்து போகும்!
ஆனாலும் உம் ஞாபகங்கள் எந்நாளும்
எம் நெஞ்சில் வாழும்!
ஆயிரம் ஆண்டானாலும்
அழியா
உம் நினைவுகளும்
உம் அன்பும், பாசத்தொடரும்
எம்மை விட்டுபிரியாது
வற்றாத உங்கள் நினைவுடன்
மனம் உருகி கலங்கி நிற்கின்றோம்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்...
I can’t believe it’s been a year since you passed on to be with our Lord! Niranjan Anna, I miss you dearly and I treasure our time spent together, our conversations-even the heated ones! You are...