Clicky

பிறப்பு 05 APR 1926
இறப்பு 26 DEC 2020
அமரர் நேசமணி யோகராஜா
இளைப்பாறிய உப அதிபர்- CCTMS வவுனியா, அதிபர்- இராஜேந்திரம்குளம் கனிஷ்ட பாடசாலை, ஆசிரியை- Tolworth & Kingston Tamil School
வயது 94
அமரர் நேசமணி யோகராஜா 1926 - 2020 வவுனியா, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தங்கை தபோ மாசிலாமணி குடும்பம் 03 JAN 2021 Australia

கண்ணீர் அஞ்சலி..?? பெரியம்மா என்ற உறவு அற்புதமானது அன்புடன் தான் வளர்த்து அறிவையும் பண்பையும் நிறைத்து பலருக்கு வளமான வாழ்க்கையை வளமார உளமார வாழ்ந்திட வாழ வைத்த அன்புத் தாயே, பெரியம்மா இவ்வுளகிலிருந்து விடை பெற்று விண்ணுலகம் விரைந்தீர்களோ.! இராசேந்திரகுள ராசா, நாகமணி உடையாரின் அன்பு மகளே அன்போடு பழகி நேசத்தோடு அனைவரையும் அரவணைத்து "நேசக்கா" ஆனாய்.. பலருக்கு கற்றுத்தந்த ஆசிரியை, அயலவரையும் உறவுகளையும் உள்ளத்தால் இணைத்து மனதால் மகிழ்வு கண்டவர் நெஞ்சார நேசித்து மனமார வாழ்ந்த அன்னையே பூமியை விட்டு விடை பெற்றாலும் புத்திர புதல்விகளின் மனதை விட்டு அகலவே மாட்டீர்கள்! பசியோடு வருவோர்க்கு சுவையாக பரிமாறி புன்னகையோடு வழியனுப்பி வைப்பாய் – விழி நீரோடு உனை அனுப்பி வைக்கிறோம் பெரியம்மா உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்! அமைதியாக துயிலும் தங்கள் ஆன்மா இறைபதம் சேர இறைவனை இறைஞ்சுகிறோம்! இப்படிக்கு அனபுடன் தங்கை தபோ மாசிலாமணி குடும்பம்.. ??