3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
9
people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
யாழ். நவாலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணராஜா பத்மாவதி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே!
வருடங்கள் மூன்று கடந்தும்
மீளவில்லை உங்கள் நினைவில் இருந்து!
நீங்கள் இல்லை என்பதையே
உணர மறுக்கிறது எம் இதயம்!
உங்கள் மடியில் நாம்
இளைப்பாற வேண்டும் என்றோம்!
ஆனால் இறைவன் மடியில் இளைப்பாற நீங்கள்
சென்றதேனோ, ஆறவில்லை எம் இதயம்!
மேகங்களிடையே எட்டிப் பார்க்கும்
சூரியன் போன்று- உங்கள்
ஒளிமுகம் மீண்டும் காண்போமா அம்மா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்