மரண அறிவித்தல்
பிறப்பு 02 JAN 1948
இறப்பு 14 MAY 2021
திருமதி நவரட்ணராஜா பத்மாவதி
வயது 73
திருமதி நவரட்ணராஜா பத்மாவதி 1948 - 2021 Manippay, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நவாலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணராஜா பத்மாவதி அவர்கள் 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ராமு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், குமாரசாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரட்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

வனிதா, சுயதா, ரட்ணராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குகேந்திரன், நிர்மலதாஸ், கோமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யஸ்வினி, வினுசாந், சயிவர்னா, கபிநயா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

கனிசா அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

பரமேஸ்வரி, திலகவதி, மங்களேஸ்வரி, கந்தசாமி, புனிதவதி, கலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மூத்ததம்பி, கணபதிபிள்ளை, நடராஜா, சிவஞானம், ஞானசேகரம், சிங்கராஜா, ஜெயராசா, துரைசிங்கம், புஸ்பராஜா, செல்வராசா, ரட்ணசிங்கம்,  தியாகேஸ்வரி, ராஜேஸ்வரி, யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரட்ணலிங்கம், இந்திரகுமார், வசந்தா, சாரதா, செல்வராணி, தபேஸ்வரி, லலிதாதேவி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வனிதா - மகள்
சுயதா - மகள்
ரட்ணராஜா - மகன்

Summary

Photos