
யாழ். செம்பியன்பற்று வடமராச்சியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Manchester ஐ வதிவிடமாகவும் , சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரெட்ணம் ரதீஷ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று உருண்டோடி விட்டாலும்
எம் இதயங்கள் இருண்டு தான் இருக்கிறது
உங்களையே நினைக்கின்றேன்
உனக்காக வாழ்கின்றேன்
கண்ணீரில் கரைகின்றேன்
கண்ணுறங்க மறக்கின்றேன்
என்னையேன் நீ மறந்தாய்
உன் நினைவை ஏன் துறந்தாய்
தூரத்து நிலவாக தொலைந்து ஏன் போனாய்!
எண்ணில்லா கனவுகளை என் மனதில் வளர்த்தாய்
ஏக்கத்தில் தவிக்க விட்டு எங்கே நீ மறைந்தாய்…
விழிமூடி எம்மை வழிகாட்டும் என்
ஒளியான தந்தையே!
ஓடி வருவீரோ என் நல்வாழ்வை காண
துள்ளித்துள்ளி நான் போகையில்
அள்ளி அணைத்த என் தந்தையே!
முத்தமிட்டு என்னை உறங்க வைத்து விட்டு
திடீரென எங்கே சென்றீர்கள்
என் தந்தையே!
புன்னகை பூத்த முகமும்
உறவுகளை நேசிக்கும் குணமும்
நட்புப்பாராட்டும் தன்மையும்
எங்கள் உயர்வையே இலட்சியமாகக் கொண்ட
தங்கள் முகம் பார்க்காது உள்ளம் வாடுகிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.