யாழ். கொக்குவில் மேற்கு வராகி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணம் இராஜேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-08-2021
செல்லத்துரையின் செல்ல மகளே
வீரசிங்கத்தின் வீர மருமகளே
நவரத்தினத்தை கவர்ந்த ரத்தினமே
ரஞ்சமலரை துளிர்விட்டு
மஞ்சுளாவை ஆதரவற்று
நவசேனைக்கும் பெறா மக்களுக்கும்
சொல்லாமல் போனது ஏன் ?
நான் வருவேன் - நான்
வருவேன் என்று கூறினீர்களே
வாரும் அம்மா என்று சொல்லும் முன்-
உங்கள்
குரல் ஓய்ந்தது எதற்காக ?
எதிர்பார்க்காமல் எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்தீர்களே
எதிர்பார்த்த எம்மை ஏமாற்றி விட்டீர்களே
கண்ணுறங்கும் நேரத்தில் கனவாக வாரீர்களே
கண்திறக்கும் நேரத்தில் நனவாகி விடுகிறீர்கள்
பாசம் மிக்க அப்பம்மா
குறும்பு செய்யும்
அம்மம்மா
குழந்தையாக மாறிய பூட்டியே
ஏன் நாங்கள் கதறியதை நீங்கள் கேட்கவில்லை
நாங்கள் வாறோம் என சொல்லும் போது
நீங்கள் வராகி அழைக்கிறார் என சென்றுவிட்டீர்களே!
நாற்காலியும் உங்களைத் தேடுகிறது
எங்களை அரவணைக்கும் கைகளும் குறைந்துவிட்டது
ஆற மறுக்கிற மனம் - உங்கள்
ஆருயிர் பார்க்கத் துடிக்கிறது
இப்பொழுது நீங்கள் மண்ணுலகை
விட்டு பிரிந்தாலும் எப்பொழுதும்
உங்கள் ஓய் எனக் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டிமார்கள்!