யாழ். நயினாதீவைப் பூர்வீகமாகவும், அரியாலையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரெத்தினம் ரகுநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மீண்டும் நீ வருவாயா மகனே....!
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்...!
கண் மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதினில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
கருவறையில் இருந்து இறங்கி
கல்லறை நோக்கிச் சென்று
ஓராண்டு ஆனதையா!
நீ இந்த மண்ணில் மீண்டும்
வந்து பிறக்க வேண்டும் என்று
இறைவனை வேண்டி ஏக்கத்துடன்
எதிர்பார்த்து நிற்கின்றேன்....
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
உன் பிரிவு எம்மை உருக்குதைய்யா
கடல் சூழ்ந்த ஈழத்திருநாட்டின் கற்பகமே!
புலத்தில் புது நாற்றாய் பூத்துக் குலுங்கினாயே!
தாக்கும் வினை வந்ததின் காரணத்தைக் கூறிடுவாய்
உன் கதை கேட்கும் பொழுதெல்லாம்
கண்ணீர் ஆறாக பெருகுதையா!
காக்கும் கடவுளிடம் கையேந்தி நின்றோம்
பார்க்க எடுக்க உன் பக்கத்துணை யாருமின்றி
பரிதவித்துத் தான் சென்றீரோ?
ஆண்டு ஒன்று சென்றாலும்
மாண்ட உன் நினைவு மாறிடுமோ?
என் அருமைக் கணவரே!
எம்மை இங்கே
தவிக்கவிட்டு எங்கு சென்றாயோ!
வானடைந்து ஒருவருடம் ஆனாலும்
உன் பிரிவுத்துயர் ஆறாது
நீங்கள் என்னைவிட்டு
நீண்டதூரம் சென்றாலும்
உன் ஆசைமுகம் என்
நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள்
திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறேன்.
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள்
தான் தெரிகிறீர்கள்
நேரில் வரமாட்டீர்களோ அப்பா!
என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
அன்பு மனைவி, மகள்கள்.