Clicky

பிறப்பு 21 AUG 1965
இறப்பு 01 DEC 2018
அமரர் நவரத்னலிங்கம் விவேகானந்தா (விவே)
MD.PhD
வயது 53
அமரர் நவரத்னலிங்கம் விவேகானந்தா 1965 - 2018 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 04 DEC 2018 United Kingdom

நோயுற்றபோதும் நீ.. நிறைந்ததோர் கனவுக் கூடம்... நிலவொளியை நிகர்த்த.. இமை மூடா அகல் விளக்கு.. தள்ளாத போதும் தளராத மனவுறுதி.. சரியோ தவறோ.. எதையுமே நகைப்பாக ஏற்று.. மலர்ந்த முகத்தோடு சுற்றிவந்த சிரிப்புச் சக்கரம்.. முடியாது தெரியாது என்ற வார்த்தைகளை விடுத்து.. முடியும் தெரியும் என்று முன்வரிசையில் அமரும் மிடுக்கு.. எட்டாத உயரத்தையும்.. எட்டிப் பார்த்திடும் முயற்சி.. கிட்டாத தூரத்தையும் .. கடந்திட எண்ணிடும் நம்பிக்கை.. தேடித்தேடி வர்ணம் குழைத்து தன்னையே வரைந்த ஓவியம்.. தேவையிலாதொரு கனவை வளர்த்திட்டு தன்னையே எழுதிய காவியம். ஆடி அசைந்து அன்பு கலந்துட .. திரை உலகம் அளந்திட்ட தென்றல்.. ஏதுவாகிலும் ஏற்று நடித்திட ஏங்கி அசைந்திட்ட ஊஞ்சல்.. கூடித்திரிந்தோம்.. கண்டு மகிழ்ந்தோம்.. நண்பா.. இது கூற்றன் இயக்கிடும் நாடகம்.. நீ ஏற்று நடித்திட்ட பாத்திரம் முடியுமுன் .. இறங்கினாய் எனனதான் காரணம்.. "அக்கினிக்கூத்தன் நாடக மன்றம்"