
யாழ். வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்னலிங்கம் விவேகானந்தா அவர்கள் 01-12-2018 சனிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நவரத்னலிங்கம், காலஞ்சென்ற சரஸ்வதி(பள்ளியக்கா) தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, பவளநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவராணி(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சாய், சாய்நாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயா(விஜி- கனடா), இராஜவினோதா(வினோ- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகநேசன், வசந்தகுமார், முருகையா, கனகம்மா, காலஞ்சென்ற ஆறுமுகம், சரஸ்வதி, சக்திவேல், ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசந்தா, பகீரதி, சைலா, அன்னலிங்கம், கனகலிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கிருசாந், சஞ்சயன், வேணுஜன், சாய்லதன், அபிஷா, அபிஷேக், அபிசனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விமல், விக்னா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சயோன், சயூரன், அபிராம் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மதிப்பிற்குரிய நவரத்தினலிங்கம் அவர்களே, உங்களை, மனையாளை இழந்த துன்பத்தில் கடைசியாகப் பார்த்தபின், இன்று உங்கள் இளவயது மைந்தனையும், அதுவும் 'இவன்தந்தை என்னோற்றான்கொல்!' என எம்மவர் பார்த்து வியக்கும்...