1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகராஜா பாக்கியலட்சுமி
வயது 79
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா பாக்கியலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையே உங்களை நாங்கள் இழந்து
ஆண்டு ஒன்று ஆனதோ
உங்களை இழந்து ஆண்டுகளின்
அதிகரிப்பு ஆனாலும்
உங்கள் மடி சேர எங்கள்
மனம் துடிக்கிறது அம்மா
கேட்டும் கொடுக்காத
தெய்வங்களுக்கு மத்தியில்
கேட்காமல் கொடுக்கும்
தெய்வம் நீங்கள் அம்மா
உங்கள் புன்னகை ஒன்றே
எங்களை இன்று
வாழ வைத்துக் கொண்டிருக்கிறது
தாயே நீங்கள் இன்றி நாங்கள்
ஏது இவ்வுலகில்
பேசியும் புரியாத
உறவுகளுக்கு மத்தியில்
பேசாமல் புரிந்து கொள்ளும்
உறவு நீங்கள் அம்மா
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
அத்தனை ஜென்மமும் உங்களுக்கு
நாங்கள் பிள்ளைகளாக பிறக்க வேண்டும் அம்மா
தகவல்:
குடும்பத்தினர்