யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா பாக்கியலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஆருயிர் அன்னையே…
மாதம் ஒன்று ஆனதோ
நீங்கள்
எம்மை விட்டு பிரிந்து...
நாட்கள் 31 கடந்தும்
மீளவில்லை
உங்கள் நினைவில்
இருந்து தாயே
அம்மா உங்கள் கடமைகளை
மிகவிரைவில்
முடித்துக்கொண்டு
எங்களிடமிருந்து சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்!
எவ்வளவு காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எங்களை
விட்டு போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் முகத்துவார அந்தியேட்டி மண்டபத்திலும், சபிண்டீகரணம் 11-09-2025 வியாக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர், 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் ஆத்ம சாந்திப் பிரார்த்தணை கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
முகவரி:
இல. 7,
57வது ஒழுங்கை,
வெள்ளவத்தை.