
யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா பாக்கியலட்சுமி அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சின்னராசா, நமசிவாயம், சேனாதிராசா, அன்னலட்சிமி மற்றும் ராசலட்சுமி(டென்மார்க்), சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகிரதி(பிரான்ஸ்), இராஜகுமாரி(இலங்கை), இராஜகுமார்(இலங்கை), சுவிகரன்(பிரான்ஸ்), இராஜதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சூரியகுமார்(பிரான்ஸ்), சிவசோதி(இலங்கை), கல்ப்பனா(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, செல்லத்துரை, இரத்தினம், மனோன்மணி, கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கார்த்திகன், கதிர்சன், கபிதன், டனுசிகா, வதுசிகா, டினோஜன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
அபிலாஷ், அதிரன் ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 15-08-2025 வெள்ளிக்கிழமை மற்றும் 16-08-2025 சனிக்கிழமை மு.ப 10.00 மணிமுதல் பி.ப 5.00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணிமுதல் ந.ப 12.00 மணிவரை நடைபெற்று பி.ப 12.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.