Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 JAN 1967
இறப்பு 27 FEB 2021
அமரர் நக்கீரன் பாலசுப்பிரமணியம் (செழியன்)
வயது 54
அமரர் நக்கீரன் பாலசுப்பிரமணியம் 1967 - 2021 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 65 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கல்வியங்காடு வேலாந்தோப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Wil ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நக்கீரன் பாலசுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் இரண்டு அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள் 

கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள் 

சொல்ல வார்த்தை இன்றி சொற்கள் தடுமாறும்
கண்கள் கொள்ளாமல் கண்ணீர் கரைந்தோடும்
வலிகள் சுமந்து தான் வாழ்கின்றோம்

உம்மை நினைக்கும்போது
எம்மையறியாமலே
என் இதயம் கனக்கிறது
 கலங்கிய விழிகளுடன்
கண்ணீர்த் துளிகளைக்
காணிக்கையாக்குகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 04 Mar, 2021
நன்றி நவிலல் Thu, 25 Mar, 2021