5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நர்சீசியஸ் ஜோண்
ஓய்வுபெற்ற நில அளவையாளர்
வயது 87
Tribute
32
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குருநகர் 6ம் குறுக்குத்தெரு அடப்பன் றோட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நர்சீசியஸ் ஜோண் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஐந்து வருடம்
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
அன்பு ஒன்றை வாடகையாய் கொடுத்து எம்
நெஞ்சினில் வாழ்கிறாய் இன்று!
தூண்டில்பட்ட மீனாய் துடிக்கின்றோமப்பா
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள்
நினைவு எம் நெஞ்சை விட்டு பிரியாது
இன்று பிரிவு என்னும் துயரால்
ஐந்து ஆண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
ஜோண் குடும்பத்தினர்
Accept our heart felt sympathies may his soul rest in peace