இரங்கல் செய்தி யாழ். காங்கேசன்துறை மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ புகலிடமாகவும் கொண்ட திருமதி நந்தகுமார் அமுதராணி அவர்கள் 19-06-2021 அன்று காலமானார். ஆண்டுகள் பலவாய்த் தன் வாழ்நாளில் மக்கள் நலன் நோக்கி செயலாற்றியவர், சிறந்த மனித நேயம் மிக்கவர். மண்ணை, மக்களை நேசித்தவர். தனது கணவனின் சமூகப்பணிக்கும் பக்கபலமாய் திகழ்ந்தவர். பொபினி தமிழ் சங்கத்தில் அங்கத்தவராயும், பொபினி தமிழ்சோலை நிர்வாகியாக அரியபல செயல்களை மாணவ சமுதாயத்திற்கு மனமுவந்து அர்ப்பணிப்புடன் ஆற்றியவர். இவரது நெறிப்படுத்தலில் பல கலை நிகழ்வுகள் மாணவரின் அறிவு, ஆற்றல், வளர்ச்சி பலவற்றிற்கு வழிசமைத்தது. எண்ணற்ற இழப்புகளால் மனம் துயரப்பட்டிருக்கும் இவ்வேளை இவரது மரணம் எதிர்பாராததும், மேலும் வேதனைதரும் ஒன்றாகவும் அமைந்துவிட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் முன்னெடுக்கப்படும் சலங்கை பரதவிழாவிற்கும் நடனப்பள்ளி மாணவர்களின் பங்களிப்பினை வழங்கியிருந்தார். இன்று துயரங்களால் நிரம்பி வழியும் எம் இதயத்தில் இவரது பிரிவும் எரிதணலில் வீழ்ந்து தவிப்பதைப்போன்றதொரு தவிப்பை தோற்றுவித்துவிட்டது, என்றும் அவர் நினைவுகள் மனதைவிட்டு அகலாதவை! அவை என்றும் வலுவானவை. ஈழத்தமிழினத்திற்காக இவர் ஆற்றிய சமூகப்பணியினை மதித்து, தலைவணங்கி உறவுகள் கரங்களை இறுகப்பற்றி, துயரிலும் பங்குகொள்கின்றோம். ஓன்றிணைவோம் சேவை செய்வோம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் செ. சுந்தரவேல் பணிப்பாளர் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்
நந்தன் குடும்பத்தில் மனைவியின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.