தோழி, வீதி வளி விதி முடித்தான், விதி முறையை உணர்தி நிற்பான், சாலை ஓர சாரதிதான் எதை அறிவான் அவன் கணக்கை, ஏங்கி நிற்கும் எம்மவர்கள் எதை இளந்தார் இப்புவியில்? கொக்கூரான் குடி அமர்ந்த கொக்குவில் இந்து கல்லூரி விதை நெற்கள் பட்டியலில் எம் நட்புவட்டம் வளர்ந்ததன்று. காலங்கள் கடந்தோடி தடைகள் பல கண்ட பின்பும் கனிவுற்ற நட்பூக்கள் காணொளி காட்சியாக பவனிவரும் காட்சி எல்லாம் கண் நிறைந்து தத்தளிக்க மென்மேலும் தொடர, தொடர்புவர ஆளுமையும் அரவணைப்பும் அளவளாவி நட்புறவும் அரும்புகட்டி துளிர் வளர்க்க துணிர்தாயோ தோழி நீர் எட்டி நின்று பார்காமல் இறைவனிடம் ஏணிவைத்து தாமதங்கள் தடையின்றி மனத்திலிடம் பெற்றுவிட்ட நம் அமிர்தம் 'நமிர்தலதா ' உம் ஆத்ம்பயணம் இறைநிலை சேர நட்பூக்கள் மனமலர்தூவி எம் மனதில் உம்நாமம் பதித்ப்போம் எப்போதும். ஆண்ம கல்விகூட நட்பூக்கள்