யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Ontario ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நமிர்தலதா பாலசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-12-2024
அன்பால் எமை ஆண்ட அம்மா
அன்றொரு நாள் ஒரு வார்த்தை
சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து
போய்
இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆனதா?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் அம்மா..!
துன்பம் ஏதும் இல்லாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உங்கள் மலர்ந்த முகத்துடன்
எங்களை உங்கள்
கண் இமைக்குள்
வைத்து நாம் வாழ
வழி அமைத்துக்
கொடுத்தீர்கள் அம்மா!
அன்பைச் சுமந்து அறிவைச் சுமந்து
நல்ல பண்பைச் சுமந்து
ஈடில்லாப்
பாசம் சுமந்து
நீங்கள் எமக்களித்த
இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன தாயே?
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட எம் அன்புத் தாயே
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
தினமும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!