Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 SEP 1965
இறப்பு 14 DEC 2021
திருமதி நமிர்தலதா பாலசிங்கம்
வயது 56
திருமதி நமிர்தலதா பாலசிங்கம் 1965 - 2021 இணுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 42 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Ontario ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நமிர்தலதா பாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 03-12-2022

கரம்பிடித்தவனோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?

என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தவிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்பு மனைவியே!

கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்

அன்பான அம்மா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...!!!

 அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Sri Katpaga Vinayagar Hindu Temple, 200 Advance Blvd #1-5, Brampton, ON L6T 4V4, Canada எனும் முகவரியில் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

Photos