

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நமசிவாயம் சுந்தரலிங்கம் இராஜகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-05-2022
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உம்மை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
அறிவூட்டி சீராட்டி வளர்த்த அப்பாவே!
அன்பான அறிவும் பாசமும்
தந்து அரவணைத்து மகிழ்ந்தாயே
நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்.
இனி இன்பத்தில் இன்
முகம் காட்டவும் துன்பத்தில்
தோள் கொடுக்கவும் இவ்வுலகில்
நாம் வாழ்ந்திட இறைவனாய் இருந்து
எம்முடன் துணை நிற்க வேண்டுகிறோம்.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்களருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததடா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே...
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்.