வவுனியா ஓமந்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சுதாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்...!
கண் மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதினில் நடந்தவைகள்
நிஜம் தானா
என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ?
உன் சிரிப்பை நாம் ரசித்த
போதெல்லாம் தெரியவில்லை
எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!
நான் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவே தெரியுதப்பா !!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய்
நாம் இருப்போம்
வாராது
சென்றதனால்
தீராது சோகமப்பா!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி மற்றும் கிரியை நிகழ்வு 23-07-2025 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். பின்னர் 02-08-2025 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை மதிய போசன நிகழ்வு BIA LOUNGE WEDDING HALL, B10 0JU எனும் முகரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.