Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 01 APR 1967
இறப்பு 14 FEB 2022
அமரர் நல்லதம்பி நந்தகுமாரன் (நந்தன்)
Former Director of Aqualite Ltd
வயது 54
அமரர் நல்லதம்பி நந்தகுமாரன் 1967 - 2022 நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட​ நல்லதம்பி நந்தகுமாரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

“31 ம் நாள் ஆனாலும் ஆறாத்துயரத்தில் எம்மை தவிக்கவிட்டு சென்ற எம் குடும்பத்தலைவன்!

எம் அன்பான அப்பா!!
உம் இழப்பை ஈடு செய்ய முடியாமல்
தினந்தினம் எம் கண்கள் கலங்குகின்றன!!!


பாசத்தின் சுடர்விளக்காய்!
அன்பின் ஒளி விளக்காய் !!
கந்தனின் கருணையோடு எம் வாழ்வில் உறுதுணையாக இருந்து
வாழ்ந்தது போதுமென்று எங்கு சென்றாயோ!!!


உம் காலடி ஓசை கேட்பது எப்போ!
புண்முறுவலுடன் கருணை சேர்ந்த முகம் பார்ப்பது எப்போ!!
எம் பிள்ளைகளின் உயிர் நாடியாய் இருந்தீர்!
உம்நாடி நின்றதும் மனமுடைந்துபோனார்கள்!!
மறுபிறப்பு இருப்பின் உம் மடியில் தவழ்வார்கள்!!!


ஏழு பிறப்பின் ஒரு பிறப்பில் உம்மோடு வாழ்ந்ததில்
திருமணம், சொந்த பந்த தத்துவத்தை உணர்ந்தேன்!!
அந்த அருமையான உறவின் அழகான அர்த்தத்தை புரிந்தேன்!!!
அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த
அடுத்த பிறப்பில் உனை மணப்பேன்!!!


ஆசைத்தம்பியாய், அன்பின் அண்ணையாய்
சகோதரர் வாழ்வில் உதித்த உத்தமனே எங்கே சென்றாய்!
எம் கதறல் கேட்கவில்லையோ!!


நண்பர்கள்,உற்றார், உறவினர்கள்
உம் பிரிவால் ஏங்குவதை உணரவில்லையோ!

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 78 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.