25ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நல்லதம்பி ஓங்காரநாதன்
இளைப்பாறிய உதவி முகாமையாளர், இலங்கை வங்கி, வவுனியா
வயது 61
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:12/12/2024.
யாழ். நயினா தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி ஓங்காரநாதன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழி
நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில் அப்பா!
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்
May his soul rest in peace...