Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 02 FEB 1932
மறைவு 06 SEP 2022
அமரர் நல்லம்மா சபாரட்ணம்
வயது 90
அமரர் நல்லம்மா சபாரட்ணம் 1932 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூர் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லம்மா சபாரட்ணம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நான்கு ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!

உங்கள் உடல்தான் பிரிந்து சென்றது
ஆனாலும் முழு நினைவாக- உங்கள்
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா!

நேசம் என்றும் நிலைத்திருக்க
அன்பான அன்னையாய்
ஆருயிர்த் துணைவியாய்

அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே
மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்

மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!

தகவல்: குடும்பத்தினர்