யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட நகுலாம்பிகை சதாசிவம் அவர்கள் 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற சதாசிவம்(இலங்கை புகையிரத நிலைய பிரதம சாரதி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இரத்னசிங்கம், குலசிங்கம், பரராஜசிங்கம் மற்றும் ராணி குணசீலன்(அவுஸ்திரேலியா), புனிதவதி தேவேந்திரராஜா(பிரித்தானியா), தவமணிதேவி விஜயரட்னம்(பிரித்தானியா), புஷ்பா கருணாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மகாசிவம், சச்சிதானந்தசிவம்(கனடா), பராசக்தி(அவுஸ்திரேலியா), தில்லைநாயகி(நியூசிலாந்து), யோகநாயகி(நியூசிலாந்து), தேவநாயகி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அமிர்தலிங்கம், அருந்தவசோதி ஆகியோரின் சகலரும் தங்கரத்தினம் கமலநாயகி ஆகியோரின் சகலியும்,
சதானந்தன்(கொழும்பு), சதாரஞ்சினி(டென்மார்க்), ஜெயானந்தன்(கனடா), சாந்தினி(கனடா), மாலினி(கொழும்பு), சிவகெங்கன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மினி(கொழும்பு), ஸ்ரீதரன்(டென்மார்க்), சசிகலா(கனடா), செல்வரஞ்சன்(கனடா), காலஞ்சென்ற நடேசபிள்ளை மற்றும் சுமுதினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
டிஷானி, லவன், ரஜிதா, சோபியா, கனித்தா, நிவேதா, ஜெனித்தா, கௌசலா, துஷிகா, துஷிந்தா, ஷர்மிலி, பவித்ரா, லம்போதரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தருண், ஹரிஷ், ஹாசினி, டியோனன், விஷ்வா, கிஷான், றொஷ்னி, அலேய்ணா, கேய்லன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2024 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heartfelt condolences. May her soul rest in peace. I am sure she will rest at the feet of God Shiva. She helped very poor people in Jaffna and Batticalo.