Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 JAN 1940
இறப்பு 13 SEP 2020
அமரர் நாகேந்திரம் மகாலட்சுமி 1940 - 2020 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரம் மகாலட்சுமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலச்சுழற்சியில் ஈராண்டு
கடந்து போனாலும் இன்னும்
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம்
நீங்கள் இல்லாத துயரம்
வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை!

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ என்பார்கள்
அது எமது அறிவுக்குத் தெரிகிறது
ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே!

பாசத்தின் முழு உருவம் என் அம்மா
பாதியிலே எம்மை விட்டு ஏன் போனீர்கள்?
என் அடுத்த பிறவியிலும்
அம்மாவாய் நீங்களே வரவேண்டும்

எங்கள் குடும்ப விளக்காய்
எமக்கு நல்வழி காட்டி
உறுதுணையாக இருந்த நீங்கள்
இப்போது எம்முடன் இல்லை

உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும்
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினர்...

தகவல்: புருசோத்-சுபா, சுஜி-சபி