யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரம் மகாலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-09-2021
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் -அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா ?
நெஞ்சடைக்கும் நினைவுகளால்
நித்தமும் நாம் கலங்குகின்றோம்
ஒருமுறை வந்து எங்கள்
துயர்துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை தொலைத்து விட்டோம்
எங்களை தெய்வங்கள் கூட கை விட்டதோ!
என் மனதோடு போராடும்
உன் மறையாத ஞாபகங்கள்
எனை என்றும் வாட்டுதையோ !
ஆறா துயர் தந்து மீளாத்துயில் கொண்டாய்
வருவாய் என்று நான்
காத்திருந்த காலங்கள் இன்று
ஆண்டு ஒன்று ஆகியது
ஓராண்டு என்ன
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது என் துயரம்
எழுந்தோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டாயோ !
கனவுகள் நிறைவேறும் காலமதில்
காலன் அவன் அழைத்து விட்டான்
உங்கள் கனவை கலைத்து விட்டான்
யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று தெரியாது
கலங்கி நிற்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!