திதி : 25-07-2023
யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகரத்தினம் சண்முகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்போடு எங்களை எல்லாம் அரவணைத்து
பாசத்தின் உயிராய் எம்முடன் வாழ்ந்து
எல்லோரையும் அழ விட்டு மறைந்த
எம் தெய்வமே! அப்பாவே!
ஓவ்வொரு விடிப்பொழுதும் நீங்கள்
எங்கே என்று எமது விழிகள் தேடுகிறது
உங்கள் நினைவுகளுடன் நாமெல்லாம்
ஒன்று சேர மனம் துடிக்குது மீண்டும்
ஒரு முறை எம்மை கட்டி அரவணைக்க
நீர் எழுந்து வாராயோ அப்பா!
கனவுகள் பல கண்டோம் எம்
அருகில் நீண்ட காலம் இருப்பீர்கள் என்று
நாம் கண்ட கனவுகள் நனவாகும் முன்பே
எம்மை விட்டு ஏன் சென்றீர்கள் அப்பா!!
இப்பொழுதும் உம் பாசத்திற்காக
ஏங்கி நாட்கள் எல்லாம் கண்ணீரில்
கரைந்தோட கலங்கித் தவிக்கின்றோம் அப்பா!!!
என்றென்றும் உங்கள் நினைவலைகள்
அழியாது எம்முடன் வாழும்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
பெரிய மாமாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி